search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க. ஸ்டாலின்"

    • தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • இஸ்ரோ ராக்கெட் ஏவும்போது அதுகுறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்தார்.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker திருமதி. வளர்மதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்."

    "மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு. இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார்.
    • நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,

    "இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். இந்திய யூனியனை பாதுகாக்க உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியா கூட்டணி பாட்னாவில் சந்தித்த போது வெறும் 19 கட்சிகள் தான் இணைந்திருந்தன. பிறகு பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கூட்டணி 26 ஆக அதிகரித்தது. தற்போது மும்பை சந்திப்பில் இது 28 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியா கூட்டணி உறுதியாக உருமாறி வருவதை அனைத்து செய்தியாளர்களும் நன்றாகவே அறிவர்."

    "நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் புகார் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி பிரபலம் அடைந்து வரும் நிலையில், மோடி அரசு சமீப காலங்களில் அவ பெயர் அதிகரித்து வருகிறது. நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை. இது நாட்டை காப்பாற்றுவதற்கும், நாட்டில் உள்ள 1.4 பில்லியன் குடிமக்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது."

    "நமது கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இந்த சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக இருந்ததோடு, திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து இருக்கிறது. ஆதரவும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • முதலமைச்சர் கள ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    மழைக் காலங்களில் நகர் முழுக்க மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்தாகவே பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

    முதலமைச்சரின் திடீர் ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க அரசு முடிவு.
    • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கலைஞர் முயற்சி செய்தார்.

    தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு தயாராகும் வகையில், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாக தமிழ் சட்ட சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றிய சட்டங்கள், அவசர சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் எடுத்து வந்தார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் இந்த தருணத்தில் தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • நாடு முழுக்க தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
    • தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து.

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

    அதில், "மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
    • காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர், "தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிறது."

    "இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

    "இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன."

    "இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளை பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது.
    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திராகாந்தி, லால்பக தூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கிய தமிழர். 1940ல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர். ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக் கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குரலாக ஓ.பி.எஸ். இருக்கிறார். கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1-ந்தேதி ஓ.பி.எஸ். ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்வதை தடுக்கிறார்கள். இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி.

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணீல் பார்க்க முடிய வில்லை.

    டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது. எந்த மாநிலத்திலாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா? தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று விடுவார்கள்.

    ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கி பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களை சார்ந்த அரசாக திகழ்வதால், ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. கலைஞர் ஏழை விதவை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதிஉதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் என நான்கு வகையான திருமண உதவி திட்டங்களுக்கு 2022-2023 நிதி ஆண்டில் 55 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திரு மாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பட்டதாரிகள் 52 நபர்கள் மற்றும் பட்டதாரி அல்லாத 3 நபர்கள் என 55 நபர்களுக்கு தங்க நாணயங்களும், ஒரு பட்டதாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 52 பட்டதாரிகளுக்கு ரூ.26 லட்சமும், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. 2021- 2022 நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 970 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ. 2.425 கோடி திருமண நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2380 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.11.90 கோடி, திருமண நிதியுதவியும் மற்றும் 8 கிராம் எடையுள்ள 3350 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு டாக்டர் கலைஞர் மூன்று உன்னதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி அனைத்துத்தரப்பட்ட மகளிர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

    கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கென இரண்டு உன்னதமான திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றில் பெண்கள் இடைநிற்றலை தவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் நோக்கிலும் புதுமைப்பெண் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டு கட்டங்களாக தொடங்கி வைத்ததின் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 149" கல்வி நிறுவனங்களிலிருந்து 3168 ஏழை, எளிய மாணவியர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிவிக்கையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு பெண்களின் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதோடு, ஏழை மக்களின் நலன் காக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
    • இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

     

    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்


    நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.


    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால், திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்றும் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம் என்றும் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
    • கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

    தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கதிர் ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     

    கமல் - மு.க. ஸ்டாலின்

    கமல் - மு.க. ஸ்டாலின்

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.

    ×